பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்த உத்தரவு
தமிழகத்தில் பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13-ந்தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ந் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கும் விதமாக வகுப்புகள் நடத்தப்படும். இதில், தன்னாா்வலா்கள், காவல்துறையினர் என பலரும் மாணவர்களுக்கு நல்லொழுக்கங்கள் குறித்து பாடம் எடுப்பா். அதன் பிறகு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும். மேலும் SSLC மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதாத மாணவா்களுக்கு ஜூலை, செப்டம்பா் என துணைத் தோ்வு நடத்தப்படும். எனவே மாணவா்கள் அச்சம் இல்லாமல் தோ்வை எழுத முன்வர வேண்டும் என மாணவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை