Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு ஊழியர்கள் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - ரூ.10,000 முதல் ரூ.30,0000 வரை!


மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக உயர்கல்வி பயின்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஊழியர்கள் பணிபுரியும் போது உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ஆசிரியர்கள் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்த அறிவிப்பு தகவல்களுக்கு Join Teachers group

மேலும் இதில் புதிய விதிமுறைகளை கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த ஊக்கத்தொகை பழைய விதிமுறைகளின்படி 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது உயர் கல்வி படித்தவர்களுக்கு 5 மடங்கு ஊக்கத்தொகை அதிகரிக்க உள்ளது. அதன்படி 2019ம் ஆண்டுக்கு பிறகு ஊக்கத்தொகை 10,000 ரூபாயில் இருந்து ரூ. 30,0000 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து உயர் படிப்பு பயிலும் ஊழியர்கள் பணிபுரியும் சம்பந்தப்பட்ட துறையில் முடித்திருக்க வேண்டும் அல்லது உயர் பதவியுடன் ஒத்திருக்க வேண்டும் என்பது அவசியமானதாகும்.

இதையடுத்து எந்தெந்த படிப்புகளுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

1. 3 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான டிப்ளமோ படிப்பு – ரூ.10,000 ஊக்கத்தொகை.

2. 3 ஆண்டுகளுக்கு மேலான பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பு – ரூ.15,000 ஊக்கத்தொகை.

3. 1 வருடம் அல்லது முதுகலை பட்டப்படிப்புகளுக்கு அல்லது டிப்ளமோ படிப்பு – ரூ.20,000 ஊக்கத்தொகை.

4. 1 வருடத்திற்கு மேலான முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பு – ரூ.25,000 ஊக்கத்தொகை.

5. PHD அல்லது அதற்கு இணையான படிப்பு – ரூ. 30,000 ஊக்கத்தொகை.
அரசு ஊழியர்கள் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - ரூ.10,000 முதல் ரூ.30,0000 வரை! அரசு ஊழியர்கள் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை - ரூ.10,000 முதல் ரூ.30,0000 வரை! Reviewed by Rajarajan on 9.6.22 Rating: 5

கருத்துகள் இல்லை