Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைத்தன. ஆனால், பங்களிப்பு பென்சன் திட்டத்தில் பெரும்பாலான சலுகைகள் நீக்கப்பட்டுவிட்டன.  


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்தது வருகிறது.  இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என 2021 சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அண்மையில் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


இந்நிலையில், நேற்று திண்டுக்கலில் அண்ணாமலையார் உயர்நிலைப் பள்ளிக்கு முன்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது, சீனியாரிட்டி அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.



பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை Reviewed by Rajarajan on 6.6.22 Rating: 5

கருத்துகள் இல்லை