சம்பளத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்க இந்த மாநில அரசு முடிவு
பீகார் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் (NPS கீழ்) குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ், இறந்த ஊழியர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தின் பலனை வழங்க முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து நிதித்துறை செயலாளர் தலைமையில் தற்போது ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது அறிக்கையை ஜூன் மாத இறுதிக்குள் மாநில அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகளின்படி, இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் இந்த நன்மையைப் பெறலாம் என்றும் அதற்காக அவர்கள் முன்கூட்டியே இந்த விருப்பத்தைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி செய்தால் NPSன் கீழ் வரும் ஊழியர்கள் பழைய ஊழியர்களின் ஓய்வு ஊதிய பலனைப் பெற முடியும்.
இது தவிர மாநில அரசு ஊழியர் ஒருவர் இறந்தால், அவரது குடும்பத்தார்கள் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 50 சதவீதத்தை 7 ஆண்டுகளுக்கு ஓய்வூதியமாகப் பெறுவார்கள். இந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அடிப்படை மற்றும் அகவிலைப்படியில் 30% தொகை கிடைக்கும். உதாரணமாக, ஒரு ஊழியர் இறக்கும் போது அடிப்படைச் சம்பளம் 50 ஆயிரமாக இருந்தால், குடும்ப ஓய்வூதியமாக 25 ஆயிரமும், அகவிலைப்படியும் 7 ஆண்டுகளுக்குப் பெற முடியும். மேலும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அடிப்படைத் தொகையில் 30 சதவீதம் அதாவது 15 ஆயிரம் மற்றும் அகவிலைப்படி தொகை ஓய்வூதியமாக கிடைக்கும்.
கருத்துகள் இல்லை