தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தமிழக அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டின் நிலவரப்படி தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரில் 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் 40 லட்சம் பேர் ஆவார்கள். இந்திய அளவில் எடுத்து கொண்டால் 15 கோடி பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தபட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருத்துக்கள் கூறப்பட்டது. கடந்த ஜூன் 1ம் தேதி நிலவரப்படி 60 வயதை பூர்த்தி அடைந்ததை சுமார் 7,000 அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இனி வரும் ஆண்டில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 25,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு துறையில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைய தலைமுறைகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் விதமாக காலிப்பணியிடங்களை அரசு நிரப்பிட வேண்டும். அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட் குறைப்பினை கைவிட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை