அதிகரிக்கும் புதிய வகை கொரோனோ பாதிப்பு... பள்ளிகள் திறப்பில் மாற்றம்?
தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும், அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா என்று குழப்பம் எழுந்துள்ளது. ஆனால் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து செய்தியாளர்களிடம், பள்ளிகள் திறப்பதில் எந்த வித மாற்றத்தையும் அரசு அறிவிக்கவில்லை.
ஆசிரியர்கள் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்த அறிவிப்பு தகவல்களுக்கு Join Teachers group
முன்னதாக அறிவித்துள்ள படி, 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவை முதல்வர் அலுவகம் மூலம் அறிவிக்கப்பட்டு, அதன்பின்னர் மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை