நாளை பள்ளிகள் திறக்கப்படுமா? அதிகரிக்கும் கொரோனா..!
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதியான நாளை 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகளும் நடந்து வருகின்றது. ஆனால் எதிர்பாராத விதமாக ஓமிக்ரான் BA5 என்ற புதிய வகை கொரோனா தொற்று தமிழகத்தில் சமீப நாட்களாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றம் இருக்குமா என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. இது குறித்து பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 100 அல்லது 200 என்ற அளவில் தான் உள்ளது. இதனால் பள்ளிகள் முன்னர் திட்டமிட்ட படி ஜூன் 13ம் தேதி திறக்கப்படும், மேலும், அதன்பின்னர், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோர்பவேக்ஸ் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை