Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை நிறுத்தம் செய்ய உள்ளதாக தகவல்

 தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில்  13,331 காலிப் பணியிடங்களை ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான 10  மாதங்களுக்கு அந்தந்த பள்ளி அருகில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமித்துக்கொள்ள பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு கல்வித்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது.


அவ்வாறு நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 என மதிப்பூதியம் வழங்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இடைக்கால ஆசிரியர் நியமனத்துக்கான உத்தரவில், டெட் தேர்ச்சி கட்டாயம் என்று கூறப்படவில்லை. மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரு பணியிடத்தை நாடும்போது, டெட் தேர்ச்சி பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இல்லையெனில், "இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலருக்கு முன்னுரிமை தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.


இந்நிலையில், கடந்த 2013 , 2014, 2017, 2019- ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணிக்கான ஆசிரியா் தகுதித்தோவில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தோச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்து கிடக்கின்றனா்.


இதற்கிடையே ஆசிரியா் தோவில் தகுதி பெற்றவா்கள் பணிக்காக, மீண்டும் ஒரு போட்டித் தோவு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையா் 13,331 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் எட்டு மாதத்திற்கு நியமனம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் பிளஸ் 2 வகுப்பு மற்றும் பட்டம் பெற்றவா்களை பணியில் நியமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனா். அரசின் இந்த நடவடிக்கை எங்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்ற ஆசிரியா்கள் இருக்கும்பொழுது, தோவில் தகுதி பெறாத அவா்களை நியமனம் செய்வது ஏன் என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தின் முக்கிய நுழைவு வாயில் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், இடைக்கால ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு மாவட்டங்களில் உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை நிறுத்தம் செய்ய உள்ளதாக தகவல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை நிறுத்தம் செய்ய உள்ளதாக தகவல் Reviewed by Rajarajan on 30.6.22 Rating: 5

கருத்துகள் இல்லை