கிராமப்புற பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க புதிய கல்விக் கொள்கை பரிந்துரை.
புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்களை தேர்வு செய்வது இடமாற்றம் செய்வது போன்றவற்றில் புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆசிரியர்கள் தேர்வு செய்யும் முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து சிறந்த ஆசிரியர்களை ஆசிரியராக பணியமர்த்த வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வு இன்னும் வலுவானதாக மாற்ற வேண்டும் அதில் படம் எடுப்பது போன்ற தேர்வினை சேர்க்க வேண்டும் மேலும் ஆசிரியர்களுக்கு இன்டர்வியூ போன்ற தேர்வுகளையும் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. கிராமப்புறங்களில் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். இவர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
ஆசிரியர்களை அடிக்கடி இடமாறுதல் செய்யக்கூடாது இதனால் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள புரிதல் சிதைந்துவிடும். இது மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளது. ஆசிரியர்களை குடும்பச் சூழ்நிலை அல்லது பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக மட்டுமே மாறுதல் அளிக்க வேண்டும்.
மேலும் நான்காண்டு B.Ed அறிமுகப்படுத்த வேண்டும், இந்த பட்ட படிப்பானது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உடன் இணைந்து செயல்பட வேண்டும். கல்வியியல் கல்லூரிகள் தனியாக இயங்க அனுமதிக்க கூடாது என கூறியுள்ளது. ஆசிரியர்கள் கற்றல் தொடர்பில்லாத பிற பணிகளில் ஈடுபடுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என இந்த குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கிராமப்புற பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க புதிய கல்விக் கொள்கை பரிந்துரை.
Reviewed by Rajarajan
on
3.6.19
Rating:
கருத்துகள் இல்லை