தமிழகத்தில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நாளை முதல் முறையாக ஆன்லைன் மூலம்
முதல் முறையாக தமிழகத்தில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நாளை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு மையத்தின் கதவுகள் மூடும் நேரத்துக்குப் (காலை 9.15) பின்னர் வந்தால் தேர்வர்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவர். தேர்வு அனுமதிச் சீட்டினை தேர்வு மையத்திலேயே தக்கவைத்துக் கொள்ளப்படும். தேர்வர்களின் எதிர்காலத் தேவைக்கு அனுமதிச் சீட்டினைப் பிரதி எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நாளை முதல் முறையாக ஆன்லைன் மூலம்
 
        Reviewed by Rajarajan
        on 
        
22.6.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
22.6.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை