Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

புதிய கல்விக் கொள்கை முன்வரைவு திட்டம் வெளியீடு - மனித வள மேம்பாட்டு துறை அறிவிப்பு


புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது இந்தியை கட்டாயமாக்க பரிந்துரை மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை குறித்து முன் வரைவு திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு திட்டத்தை முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்வி கொள்கை காண வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 



இந்த கல்விக் கொள்கை காண வரைவு திட்டம் புதிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக https://mhrd.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குழு மும்மொழிக்கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.மும்மொழிக்கல்வி என்பது, தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழி என்று இருக்க வேண்டும் என கூறி உள்ளது.

மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்றும் மூன்றாவது மொழித்தேர்வு இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 



இந்தி பேசும் மாநிலங்களில், மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தி பேசாத மாநிலங்களில், கட்டாயம் மூன்றாவது மொழியாக இந்தியை இணைக்க வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வி துறையில் நான்கு அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அடிப்படைக் கல்வி ஆரம்பக்கல்வி இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலை கல்வி என பிரிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் முறை மேல்நிலைக் கல்வியில் அறிமுகப்படுத்தவும், யோகா, நீர்மேலாண்மை உள்ளிட்டவற்றையும் பாடமாக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய கல்விக்கொள்கை வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை, nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள  மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
புதிய கல்விக் கொள்கை முன்வரைவு திட்டம் வெளியீடு - மனித வள மேம்பாட்டு துறை அறிவிப்பு புதிய கல்விக் கொள்கை முன்வரைவு திட்டம் வெளியீடு - மனித வள மேம்பாட்டு துறை அறிவிப்பு Reviewed by Rajarajan on 1.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை