Flash News : வழக்கு தொடர்ந்த 7 ஆசிரியர்களுக்கு மட்டும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு
மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது இதில் வழக்கு தொடர்ந்த 7 ஆசிரியர்கள் மட்டும் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசின் வாதத்தை ஏற்று மூன்றாண்டு நிபந்தனையை நீக்க மறுத்து வழக்கு தொடர்ந்த ஏழுபேருக்கு மட்டும் நிபந்தனையில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத் தலைவர் ஆ. சீனிவாசன் கூறுகையில் 2019-2020 ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள மூன்று ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் விதி (நமது மாநிலக் கழகத்தின் வழி காட்டுதல்களுக்கு இணங்க) சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு பொருந்தாது என்றும் மாறுதல்களுக்கான கலந்தாய்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.இத்தீர்ப்பினை தமிழ் நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் உளமார வரவேற்கிறது கூறி உள்ளார்.
Flash News : வழக்கு தொடர்ந்த 7 ஆசிரியர்களுக்கு மட்டும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு
Reviewed by Rajarajan
on
28.6.19
Rating:
கருத்துகள் இல்லை