குறைவான மாணவர்கள் கொண்ட மேல்நிலைப் பிரிவு மாணவர்களை அருகிலுள்ள பள்ளிக்கு மாற்ற உத்திரவு
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
அரசு பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் கட்டாய இடமாறுதல் செய்வது தொடர்பான அரசாணை கடந்த வெள்ளிக் கிழமை பிறப்பிக்கப்பட்டது. அரசாணையில், பல்வேறு தகவல்களை அரசின் பள்ளிக்கல்வி துறை பதிவு செய்து இருந்தது. அதில் ஒன்றுதான், குறைந்த எண்ணிக்கை கொண்ட மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்பதுஆகும். நகர்ப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 30 மாணவர்கள், கிராமப்புறத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கக்கூடாது.
அந்த பள்ளியில் மாணவர்கள் குறைவாக இருந்த பாடப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
குறைவான மாணவர்கள் கொண்ட மேல்நிலைப் பிரிவு மாணவர்களை அருகிலுள்ள பள்ளிக்கு மாற்ற உத்திரவு
Reviewed by Rajarajan
on
25.6.19
Rating:
கருத்துகள் இல்லை