புதிய கல்வியாண்டில் ஆசிரியர்கள் எதிர்நோக்க கூடிய புதிய மாற்றங்கள்
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை தாரக மந்திரமாக கொண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ஆசிரியர்கள் புதிய கல்வியாண்டுகளில் அவர்கள் எதிர் நோக்க இருக்கக்கூடிய புதிய மாற்றங்கள் அவர்களின் சாதனைக்கு விடக்கூடியதாக அமைகிறது.
அந்த வகையில் இந்த கல்வியாண்டில் பல்வேறு புதிய மாற்றங்களை கையாளக்கூடிய திறன் படைத்த ஆசிரியர்களாக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய பாடதிட்டம் 2 3 4 5 7 8 10 12ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் புதிய பாட திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பிற்கும் பாடங்களை டிஜிட்டல் முறையில் பயிற்றுவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவே ஆசிரியர்கள் ஸ்மார்ட்போன் எனப்படும் தொலைபேசியை பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் வீடியோ காட்சிகளை திரையிட செய்யக்கூடிய அளவிற்கு நான் வல்லமை படைத்தவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் வருகை பதிவேடு செல்லிடை பேசியில் மொபைல் ஆப் பின்வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளதால் அதனை கையாளக்கூடிய திறனை நாம் பெற்றிருக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் அனைத்து பணிகளையும் தொழில்நுட்பத்தின் வாயிலாகவே செயல்படுத்த இருப்பதால் நாம் கணினி சார்ந்த செயல்பாடுகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. நேரம் தவறாமை என்பது மிக முக்கியமானதாகிறது எனவே குறித்த நேரத்திற்கு முன்பாக பள்ளிக்கு சென்று நம் வருகைப்பதிவேட்டில் பதிவிடுதல் அவசியமாகிறது. இனி வரும் பல்வேறு புதிய மாற்றங்களை, நாம் தெரிந்து கொள்ளக் கூடிய வல்லமை படைத்தவர்களாக இருந்தால் மட்டுமே சிறந்ததொரு ஆசிரியர்களாக செயல்பட முடியும். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம் உடனுக்குடன் நம்மை தயார் செய்து கொள்ளுதல் அவசியம்.
புதிய கல்வியாண்டில் ஆசிரியர்கள் எதிர்நோக்க கூடிய புதிய மாற்றங்கள்
Reviewed by Rajarajan
on
2.6.19
Rating:
கருத்துகள் இல்லை