Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

30.7.2019 முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூறப்பட்ட பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அறிவுரைகள்!!




1) தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப் பயிற்சி நோட்டு தினசரிஎழுதி தேதியுடன் திருத்தம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

2) சொல்வதை எழுதுதல் பயிற்சி அந்தெந்த வகுப்புக்கு ஏற்றவாறு தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதி திருத்தம் செய்யப்பட வேண்டும்.

3) பருவத்தேர்வு மாதங்களில் மொழி படத்திற்கு 1 கட்டுரை யும் மற்ற மாதங்களில் 2    கட்டுரைகளும் எழுத்தப்பட்டு திருத்தம் செய்ய பட வேண்டும்.

4) அனைத்து மாணவர்களும் ஏற்ற இறக்கத்துடன் பயிற்சி அளிக்க வேண்டும்.

5)News reader role model லில் அனைத்து மாணவர்களும் பங்கு பெற செய்ய வேண்டும்.

6) 1-8 வகுப்புக்கு ஆசிரியர் பாடக்குறிப்பேடு  எழுதப்பட வேண்டும்.

7) எல்லா வகுப்புக்களுக்கும் பாட நோட்டு எழுதப்பட்டு திருத்தம் செய்யப்பட வேண்டும்.

8) FA(a),FA(b) மற்றும் CCE பதிவேடுகள்பராமரிக்கபட வேண்டும்.

9) ஒவ்வொரு வகுப்பறையிலும் கால அட்டவணை பின்பற்றி பதிவேடு பேணப்பட வேண்டும்.

10) தரைமட்ட கரும்பலகையில் வண்ண சுண்ணக்கட்டி கொண்டு எழுத பயிற்சி கொடுக்க பட வேண்டும்.



11) எழுத்துக்கள் தெரியாமல் எந்த மாணவர்களும் இருக்க கூடாது.

12) அனைத்து மாணவர்களுக்கும் வாய்பாடு தெரிந்து இருக்க வேண்டும்.

13) science kit & maths kit பயன்படுத்தி பதிவேடு பராமரிக்க வேண்டும்.

14) நூலகம் மற்றும் புத்தகப்பூங்கொத்து படிக்கும் மாணவர்களை  ஊக்கப்படுத்தி பரிசு வழங்கப்பட வேண்டும்.

15) கணித அடிப்படடை செயல்பாடுகள், இடமதிப்பு, மடங்குகள், மன கணக்கு, வாழ்க்கை கணக்குகளுக்கு பயிற்சி அளிக்க பட வேண்டும்.

16) மன்ற செயல்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் செயல்படுத்தி பதிவேடு பேணப்பட வேண்டும்.

17) ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு  பேணப்பட வேண்டும்.

18) பள்ளி மற்றும் வகுப்பறைகள் தூய்மையாக இருத்தல் வேண்டும்.

19) அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் வினாக்களுக்கு பதில் அளிக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

20) செய்யுள் பகுதியில் மனப்பாட பாடலை இராகத்துடன் பாட பயிற்சி அளிக்க பட வேண்டும்.
30.7.2019 முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூறப்பட்ட பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அறிவுரைகள்!! 30.7.2019 முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் கூறப்பட்ட பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அறிவுரைகள்!! Reviewed by Rajarajan on 3.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை