அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 5% அளவிற்கு அகவிலைப்படி வழங்க வாய்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஜனவரி மாதங்களில் விலைவாசி உயர்வின் அடிப்படையில் அகவிலைப்படி வழங்கி வருகிறது. தற்சமயம் விலை குறியீட்டு 2% சதவீதம் அதிகரித்துள்ளது.(May 314 -June 316)
இதன் காரணமாக ஜூலை 2019 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ அதிகரிப்பு 5% இருக்கும் என தெரிகிறது.அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை செப்டம்பர் மாதம் வழங்கிய பின், இதற்கான முறையான அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து அரசாணையும் வெளிவரும். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் புதிய அகவிலைப்படி அமலுக்கு வரும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை விகிதங்கள் மாநில அரசும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டால் தற்போது 12% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 5% அகவிலைப்படி உயர்வினால், 01.07.2019 முதல் 17% அகவிலைப் படி பெறுவார்கள்.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 5% அளவிற்கு அகவிலைப்படி வழங்க வாய்ப்பு
Reviewed by Rajarajan
on
1.8.19
Rating:
கருத்துகள் இல்லை