5,8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து - கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முழு பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு நடைபெறுமா? அல்லது 3ம் பருவ பாடத்திட்டத்துக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறுமா? என்பது குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மூன்றாம் பருவத்தேர்வை ரத்து செய்வது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
5,8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து - கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
Reviewed by Rajarajan
on
3.10.19
Rating:
கருத்துகள் இல்லை