பொறியியல் படிப்பில் சேர, வேதியியல் கட்டாயம் இல்லை - AICTE அறிவிப்பு
தமிழ்நாட்டில், பொறியியல் படிப்பில் சேர, 11, மற்றும் 12ஆம் வகுப்பில், அறிவியல் பாடப்பிரிவுகளாக கருதப்படும், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களுடன், கணினி அறிவியல் அல்லது உயிரியல் பாடங்களைத் தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.
இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர, கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய கட்டாய பாடங்களுடன், ஏற்கனவே கட்டாயமாக இருந்த வேதியியலுக்கு பதிலாக, வேதியியல், உயிரி தொழில்நுட்பம், உயிரியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, பொறியியல் வரைகலை, தொழிற் படிப்புகள் போன்ற ஏதேனும் ஒன்றை படித்திருந்தால் போதுமானது என AICTE அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேர, வேதியியல் கட்டாயம் இல்லை - AICTE அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
14.2.20
Rating:
Reviewed by Rajarajan
on
14.2.20
Rating:


கருத்துகள் இல்லை