Tamil Nadu Budget 2020 ஆண்டு பட்ஜெட்டில் கல்வி முன்னேற்றத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிநிலை அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2020
தமிழக அரசு இன்று இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று சமர்ப்பித்துள்ளது. இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181.73 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தரமான கல்வியை மேம்படுத்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.
அரசு உயர் மேல்நிலை பள்ளிகளுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்காக ரூ.520.13 கோடி ஒதுக்கீடு.
மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்க ரூ.1018.4 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வி ஊக்கத் தொகை திட்டத்திற்கு ரூ.1949.58 கோடி ஒதுக்கீடு
ஏழை மாணவர்கள் உயர்கல்வியை பெறும் வகையில் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்க 506 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
நபார்டு வங்கியின் உதவியுடன், ரூ.106.29 கோடி செலவில் 23 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
போன்ற திட்டங்கள் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget 2020 ஆண்டு பட்ஜெட்டில் கல்வி முன்னேற்றத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிநிலை அறிவிப்புகள்
Reviewed by Rajarajan
on
14.2.20
Rating:
கருத்துகள் இல்லை