Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா...!! சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..!!


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல் முறைகள் அறிக்கையில் 01.01.2020 அடிப்படையில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமையாசிரியர்களில் பணி மூப்பு பட்டியல் தயாரிப்பில் அரசாணை நிலை எண் 497 கல்வி அறிவியல் தொழில் நுட்பவியல் துறை நாள் 26. 06.1995 ன்படி 57வயது முடித்தவர்களை வட்டாரக்கல்வி அலுவலர் (முன்பு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம்) நியமனத்திற்கு பரிசீலிக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் 31.12.2019 அன்று 57 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்களை மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்க கூடாது என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1995 ல் வெளியிடப்பட்ட அரசாணை எண் 497 ன்படி ஒரே சம்பள அளவில் பணி மாறுதல் வழங்குவதற்கு மட்டுமே 57 வயது பூர்த்தியடைந்தவர்களை சேர்க்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வுக்கு இது பொருந்தாது. காலம் காலமாக ஓய்வுப்பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன் கூட பதவி உயர்வு வழங்கப்பட்டுவருவது நடைமுறையில் இருந்துவருகிறது. எனவே 57 வயது முடிந்த முழு தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களையும் வட்டாரக்கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு பணிமூப்பு பட்டியலில் சேர்த்திட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா...!! சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..!! ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா...!! சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..!! Reviewed by Rajarajan on 27.2.20 Rating: 5

கருத்துகள் இல்லை