Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு கடுமையான விதிமுறைகள் TRB அறிவுப்பு


வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு 14.02.2020 முதல் துவங்கி  16.02.2020 வரை நடைபெறஉள்ளது.  டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளையொட்டி  கடுமையான  கட்டுப்பாடுகள் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. 

*ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய கடவு சீட்டை வைத்துக்கொண்டு தேர்வறைக்கு வரவேண்டும்.

* வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்ட் ஆகியவற்றில் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

* ஹால் டிக்கெட்டில் உள்ள படத்துடன் தேர்வர் முகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

* சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதில் வைத்திருக்க வேண்டும்.

* தேர்வு மையத்திற்குள் நகை அணிந்து செல்ல தடை.

* தேர்வர்கள் வெளியிலிருந்து பேனா, பேப்பர் எடுத்து செல்ல தடை.

* மேஜிக் பேனா மோசடியை தடுக்க தேர்வறையிலேயே பேனா வழங்குகிறது டி.ஆர்.பி.

* வாட்ச், பெல்ட், ஷு, ஹீல்ஸ் செருப்பு அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை தேர்வு நடைபெறும் பகுதியானது புதிதாக ஒதுக்கப்படவிருக்கின்றது. தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் எந்த பகுதியில் தேர்வு எழுத போகின்றனர் என்ற தகவல் அவர்களுக்கே கிடைக்கப்பெறும்.

இந்த முறை அவர்கள் தேர்வு செய்திருக்கக்கூடிய நகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. தூத்துகுடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருந்து அருகே உள்ள மாவட்டங்களளை தேர்வு செய்தவர்களுக்கு சென்னை, காஞ்சிபுரம்  போன்ற பகுதிகளும், அதேபோல கோயம்புத்தூரை சேர்ந்தவர்களுக்கு கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு கடுமையான விதிமுறைகள் TRB அறிவுப்பு வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு கடுமையான விதிமுறைகள் TRB அறிவுப்பு Reviewed by Rajarajan on 13.2.20 Rating: 5

கருத்துகள் இல்லை