Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

காலை உணவு திட்டம் அறிமுகபடுத்த தமிழக அரசு முடிவு... அறிவிப்பு நாளை வெளியாகலாம்...?

காலை உணவுத் திட்டம் தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க தமிழக அரசு முடிவு.
சென்னை மாநகராட் சியில் உள்ள சுமார் 320 பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 85 ஆயி ரம் பள்ளி மாணவ , மாணவிக ளுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவ ருகிறது . இந்தத் திட்டத்தில் இட்லி , தோசை , பொங்கல் , உப்புமா போன்ற உணவு வகை கள் காலை உணவாக தினமும் மாணவர்களுக்கு வழங்கப்படு கின்றன . சென்னையில் வெற்றி கரமாக நடைபெற்று வரும் இத் திட்டத்தை தமிழகம் முழுவ தும் விரிவுப்படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது . இந்தத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப் டுத்த ஆண்டுக்கு ரூ . 8 ஆயிரம் கோடி செலவாகும் . பள்ளிக் கல்வித்துறை , சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் ஆலோ சிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக் கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகி றது .

இதையடுத்து இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக் கையின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர் . காலை உணவுத் திட்டத்தில் , தமிழகத்தின் பாரம்பரிய பச்சைப்பயிறு , கேழ்வரகு அடை குதிரைவாலி , சாமைக் கஞ்சி , கொண்டைக்கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உண வுகள் வழங்கப்படும் என்றும் , இதைத் தொடர்ந்து வரும் கல் வியாண்டிலிருந்தே காலை உணவுத் திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் செயலாக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது .
காலை உணவு திட்டம் அறிமுகபடுத்த தமிழக அரசு முடிவு... அறிவிப்பு நாளை வெளியாகலாம்...? காலை உணவு திட்டம் அறிமுகபடுத்த தமிழக அரசு முடிவு... அறிவிப்பு நாளை வெளியாகலாம்...? Reviewed by Rajarajan on 13.2.20 Rating: 5

கருத்துகள் இல்லை