கல்வித் துறை அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஆசிரியர் பணி விதிகளில் திருத்தம்
பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான, மொத்த காலியிடங்களில், 2 சதவீதத்தை, கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களான, அமைச்சு பணியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை, பிளஸ் 2 முடித்து, தொடக்க கல்வி டிப்ளமா படித்திருந்தால், அவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், இனி வரும் காலங்களில், தொடக்க கல்வி டிப்ளமா படிப்புடன், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கல்வித் துறை அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஆசிரியர் பணி விதிகளில் திருத்தம்
Reviewed by Rajarajan
on
16.2.20
Rating:
கருத்துகள் இல்லை