Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Flash News: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!!

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிராம ஊராட்சி, ஒன்றிய, மாவட்டக் கவுன்சிலர் பதவிகளுக்கான நேரடி ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 2 கட்டமாக நடைபெற்றது.

ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைக் கொண்ட நகர்ப்புற உள்ளாட்சிக்கானத் தேர்தல் தேதி இன்னும்அறிவிக்கப்படவில்லை.

 இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, துவாக்குடி, மணப்பாறை, துறையூர் ஆகிய 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என மொத்தம் 252 கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
Flash News: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!! Flash News: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு!! Reviewed by Rajarajan on 27.2.20 Rating: 5

கருத்துகள் இல்லை