பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக அரசு அறிவித்தபடி பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஊதிய மாற்றங்களின்போது அளிக்கப்பட வேண்டிய 21 மாத நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி களப்பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியாளர்கள், பல்வேறு அரசு துறைகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் என்று நிரந்தர ஊதியம் இல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அவர்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு அவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் மற்றும் பணி நிரந்தரம் செய்யப் வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம்
Reviewed by Rajarajan
on
11.2.20
Rating:
கருத்துகள் இல்லை