நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும், முடிவுகளை தெரிந்து கொள்ள பின்வரும் வழிமுறைகளை தொடரவும்...
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற படிப்புகளில் சேர மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வை கட்டாயமாக்கியது. தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு இருந்த நிலையிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2000 மையங்களில் நாடு முழுவதும் 14 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.
நீட் தேர்வு தொடர்பான விடைகள் குறித்து ஆட்சேபனை விண்ணப்பிக்க மே 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த மாத இறுதியில் கவுன்சிலிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ள முதலில் candidate login செய்ய வேண்டும்.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.
பின்னர் உங்களுக்கான நீட் தேர்வு முடிவுகள் சிறிய pop up விண்டோவில் தோன்றும்.
இதனை என் பிரிண்டரில் கனெக்ட் செய்து பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம்.
முடிவுகளைக் காண கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும், முடிவுகளை தெரிந்து கொள்ள பின்வரும் வழிமுறைகளை தொடரவும்...
Reviewed by Rajarajan
on
5.6.19
Rating:
கருத்துகள் இல்லை