தமிழ்நாட்டில் கல்வி இடைநிற்றல் விகிதாச்சார ஆய்வின் முடிவுகள்
கல்வி இடைநிற்றல் விகிதாச்சார முடிவுகள் குறித்து இந்திய அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி தொடக்கப் பள்ளியில் சேரும் மாணவர்களின் விகிதாச்சார அடிப்படையில் 70% மாணவர்கள் மேல்நிலைப் படிப்பை படித்து முடிக்கின்றனர். இதில் மாணவர்கள் மாணவிகள் இருவருடைய விகிதாச்சாரமும் தமிழ்நாட்டில் ஒரே அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 86.2 பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்றன இதற்கு அடுத்தபடியாக இமாச்சலப் பிரதேசம் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்கள் உள்ளனர்.
பள்ளிக் கல்வியை முழுமையாக நிறைவடையாமல் இடையில் நிற்கும் மாணவர்கள் விகிதம் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டுமே மிக அதிகமாக உள்ளது. அந்த மாநிலத்தில் 30 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிப்படிப்பை முழுமையாக நிறைவு செய்கின்றன. இந்திய அளவில் பழங்குடியினர் மாணவர்கள் 61 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிப்படிப்பை முழுவதுமாக நிறைவு செய்வதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி இடைநிற்றல் விகிதாச்சார ஆய்வின் முடிவுகள்
Reviewed by Rajarajan
on
4.6.19
Rating:
கருத்துகள் இல்லை