இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக ஷூக்கள் வழங்கப்படும்
தமிழகத்தில் ஜூன் மூன்றாம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டு துவங்கியது நேற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் அரசு வழங்கிய இலவச பாடநூல் மற்றும் நோட்டு புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு வரை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலணிகளை மாற்றி
இந்த ஆண்டு முதல் ஷூக்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது அதில் ஒன்றாக மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக ஷூக்கள் வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி விரைவில் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் ஷூக்கள் வழங்க முடிவு செய்துள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக ஷூக்கள் வழங்கப்படும்
Reviewed by Rajarajan
on
4.6.19
Rating:
கருத்துகள் இல்லை