தினமும் இட்லி சாப்பிடுவீர்களா? அப்பொ நீங்க ஆரோக்கியமானவர்தான்
நம் இட்டிலியில் எவ்வளவு நன்மைகள் இருக்கும் தெரியுமா? அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து அரைத்து மறுநாள் காலையில் இட்லி செய்த சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் ஆய்வு ஒன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அரிசியிலும் உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள் நார்ச்சத்துகள் இரும்பு கால்சியம் பாஸ்பரஸ் போன்றவை நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.
மேலும் இதனால் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன. உளுத்தம்பருப்பு சேர்த்து இட்லி செய்வதால் காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால் நாள் முழுவதும் உடல் வலிமையுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும். உளுந்தை நீராவியில் வேக வைப்பதன் மூலம் உளுந்தில் உள்ள சத்தை சேதப்படுத்தும் காரணிகள் அழிக்கப்படுவதால் கனிம சத்துகள் உடலுக்குக் கிடைப்பதை அதிகரிக்கிறது.
மேலும் இட்லி சாப்பிடுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கலாம் அதேபோன்று இது எண்ணெய் இல்லாமல் ஆவில் சமைக்கப்படுவதால் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. காலையில் மற்ற உணவுகளை விட இட்லியை சாப்பிட்டால் செரிமான மண்டலத்தினால் எளிதில் செரிக்கப்படும். இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்கும் அதனால் தான் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இட்லியை பரிந்துரை செய்கிறார்கள்.
பொதுவாக நாம் சாப்பிடுகிற உணவு என்பது ருசிக்காக மட்டுமல்லாமல் அதனால் சத்துக்கள் கிடைக்கக் கூடியதாகவும், எந்தப் பக்க விளைவும் இல்லாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் காலையில் இட்லியே சிறந்த உணவு என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இனி இட்லியை யாரும் வெறுக்காமல் விரும்பி சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
தினமும் இட்லி சாப்பிடுவீர்களா? அப்பொ நீங்க ஆரோக்கியமானவர்தான்
Reviewed by Rajarajan
on
8.8.19
Rating:
கருத்துகள் இல்லை