பொதுபிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு
இந்திய மருத்துவ கவுன்சில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய சட்டம் இயற்றி உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவ படிப்பிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறவுள்ள நிலையில், 10% இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்காக கூடுதலாக 25 சதவிகித அளவுக்கு இடங்களை உருவாக்கி கொள்ளவும் மருத்துவ கவுன்சில் யோசனை தெரிவித்துள்ளது.
பொதுபிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு
Reviewed by Rajarajan
on
8.6.19
Rating:
கருத்துகள் இல்லை