நாளை தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது 1552 மையங்களில் 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் எட்டு வரை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதன்படி தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை முதல் தாள் நாளை மறுநாள் இரண்டாம் தளம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1552 மையங்களில் 6 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுத உள்ளனர் முதல் தாள் 476 தேர்வு மையங்களும் இரண்டாம் தாளுக்கு 1081 தேர்வு மையங்களும் நடைபெறும்.
சென்னையில் மட்டும் 88 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை கண்காணிக்க மாவட்ட அளவில் கல்வி அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. தேர்வில் காப்பி அடிப்பது தடுப்பதற்காக பறக்கும் படையினர் குழூ அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு மொபைல் தொலைபேசி மின்னணு சாதனங்கள் போன்றவை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு பணியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்வுக்கு வரும் ஆசிரியர்கள் தங்கள் ஹால் டிக்கெட் மற்றும் ஒரு அரசு அளித்த அடையாள அட்டையை கொண்டு வருதல் அவசியமாகிறது. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லை என்றால்அதில் தங்களது புகைப்படம் ஒட்டி பதிவு பெற்ற அரசு அலுவலரிடம் கையொப்பம் பெற்று தேர்வு மையத்திற்கு வருகை புரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு பணியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்வுக்கு வரும் ஆசிரியர்கள் தங்கள் ஹால் டிக்கெட் மற்றும் ஒரு அரசு அளித்த அடையாள அட்டையை கொண்டு வருதல் அவசியமாகிறது. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லை என்றால்அதில் தங்களது புகைப்படம் ஒட்டி பதிவு பெற்ற அரசு அலுவலரிடம் கையொப்பம் பெற்று தேர்வு மையத்திற்கு வருகை புரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது 1552 மையங்களில் 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்
Reviewed by Rajarajan
on
7.6.19
Rating:
கருத்துகள் இல்லை