அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைக்காக 8 லட்சம் பேர் காத்திருப்பு, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு எண்ணிக்கை 79 லட்சமாக உயர்வு
தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 2மாநில வேலைவாய்ப்பு அலுவல கங்களும் (சென்னை மற்றும் மதுரை), 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இதுவரை வேலைவாய்ப்புக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு செய்தவர்களின் எண் ணிக்கை 79 லட்சத்தைத் தாண்டி யுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக மட்டும் 8 லட்சத் துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கி றார்கள்.
.இந்நிலையில் 2019, ஜூலை 31 நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒட்டுமொத்த பதிவுதாரர் களின் எண்ணிக்கை 79 லட்சத்து 44 ஆயிரத்து 97 ஆக உள்ளது. இதில் அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக காத்திருப்பவர்கள் 8 லட்சத்து 18 ஆயிரத்து 990 பேர். அவர்களில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 18 பேர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்கள். 3 லட்சத்து 61 ஆயி ரத்து 448 பேர் பட்டப் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள். 2 லட்சத்து 67 ஆயிரத்து 524 பேர் முதுகலை பட்டப் படிப்புடன் பி.எட் முடித்த வர்கள்.
பட்டப்படிப்பு அளவிலான கல்வித் தகுதியை பொறுத்தவரை யில், 4 லட்சத்து 31 ஆயிரத்து 561 பி.ஏ பட்டதாரிகளும், 5 லட்சத்து 82 ஆயிரத்து 699 பி.எஸ்சி பட்ட தாரிகளும், 2 லட்சத்து 98 ஆயிரத்து 909 வணிகவியல் பட்டதாரிகளும் பதிவு செய்துள்ளனர். அதேபோல், 2 லட்சத்து 28 ஆயிரத்து 950 பொறி யியல் பட்டதாரிகளும் 2 ஆயிரத்து 302 மருத்துவப் பட்டதாரிகளும், 6 ஆயிரத்து 815 வேளாண் பட்ட தாரிகளும், 1,540 கால்நடை மருத்துவப் பட்டதாரிகளும் 2 ஆயிரத்து 117 பி.எல் பட்டதாரிகளும் அரசு வேலைக்காகக் காத்திருக் கிறார்கள்.
அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைக்காக 8 லட்சம் பேர் காத்திருப்பு, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு எண்ணிக்கை 79 லட்சமாக உயர்வு
Reviewed by Rajarajan
on
11.8.19
Rating:
Reviewed by Rajarajan
on
11.8.19
Rating:


கருத்துகள் இல்லை