1 ரூபாய்க்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணம்- அசத்தும் சென்னை மெட்ரோ
Enhancing last mile connectivity in the city, CMRL in association with Flyy Rental Service has launched a fleet of keyless, smart and eco-friendly electric scooters for ₹1 per minute. Currently, Flyy is operating from 4 Metro stations. #ChennaiMetro #CMRL #FLYY #ElectricScooter pic.twitter.com/1rZTTfxJsO
— Chennai Metro Rail News (@MetroChennai) January 18, 2020
மின்சாரத்தால் இயங்கும் ஃப்ளை மாடல் இருசக்கர வாகனம் குறிப்பிட்டுள்ள 4 மெட்ரோ நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும். 5 ரூபாய் கட்டணம் செலுத்தி இ-பைக் சேவையை பெற முதலில் புக் செய்ய வேண்டும். அதன்பின் நாம் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் நாம் பயணிக்கலாம். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த இ-பைக்கை பயன்படுத்த முடியும்.
இரண்டு நாட்களுக்கு எல்லாம் வைத்திருக்க முடியாது. தொடர்ந்து தினமும் இ-பைக் சேவையை பெற வேண்டும் என்றால் தினமும் 5 ரூபாய் கட்டணம் செலுத்தி நிமிடத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு சாவி எல்லாம் கிடையாது. ஸ்மார்ட் போனில் கூகுள் பிளேவில் இருந்து ஃப்ளை(FLYY) செயலியை பதிவிறக்கம் செய்து அதில் லாகின் செய்தால் போதும். வாகனத்தின் க்யூ ஆர் கோட் வைத்து ஸ்கேன் செய்தால் வண்டியை லாக் மற்றும் அன் -லாக் செய்து கொள்ள முடியும். வண்டியுடன் இலவசமாக ஹெல்மெட் வழங்கப்படும்.
1 ரூபாய்க்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணம்- அசத்தும் சென்னை மெட்ரோ
Reviewed by Rajarajan
on
23.1.20
Rating:
கருத்துகள் இல்லை