Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC - குரூப்-1 தேர்வுக்கு பிப். 19 வரை விண்ணப்பிக் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அதிகாரிகள் அந்தஸ்திலான பணியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரூப்-1ல் காலியாக உள்ள 69 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நேற்று வெளியிட்டது. இதில் துணை கலெக்டர் 18 பணியிடங்கள், போலீஸ் துணை சூப்பிரண்டு 19 காலி இடங்கள், வணிக வரித்துறை உதவி கமிஷனர் 10 இடங்கள், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 14 இடங்கள், கிராம மேம்பாட்டு உதவி இயக்குனர் 7 இடங்கள், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 இடம் ஆகியவற்றுக்கான அறிவிப்பை அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அடுத்த மாதம் 19ம் தேதி கடைசி நாள் ஆகும். வங்கிகள் மூலமாக தேர்வுக்கு கட்டணம் செலுத்த, அடுத்த மாதம் 21ம் தேதி கடைசி நாள் ஆகும். குரூப்-1 பதவிக்கான முதல் நிலை தேர்வு ஏப்ரல் 5ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல்1 மணி வரை நடைபெறும். முதல் நிலை தேர்வுக்கான முடிவு மே மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெயின் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான முடிவு நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. நேர்முகத்தேர்வு முடிந்த பின்னர் டிசம்பர் மாதம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

முதல்நிலை தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பொது அறிவியல் (டிகிரி தரத்தில்) 175 கேள்விகள், திறனறிவை கண்டுபிடிக்கும் வகையில் 25 கேள்விகள் என 200 கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தேர்வாணைய இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

APPLY ONLINE


null

null
TNPSC - குரூப்-1 தேர்வுக்கு பிப். 19 வரை விண்ணப்பிக் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு TNPSC - குரூப்-1 தேர்வுக்கு பிப். 19 வரை விண்ணப்பிக்  டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு Reviewed by Rajarajan on 21.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை