முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் எப்பொழுது தேர்வர்கள் எதிர்பார்ப்பு
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.
தற்போது நீதிமன்ற தீர்ப்பால் வேதியியல் பாடத்திற்கான தேர்வுப்பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிய பட்டியல் வெளியிடுவதா மேல்முறையீடு செய்வதா என்ற குழப்பம் அதிகாரிகளிடையே நிலவுகிறது.
மேலும் நிதிச்சுமை அதிகமாக இருப்பதால் புதிய பணிநியமனத்திற்கு ஒப்புதல் வழங்க நிதித்துறை தயங்குவதாலும் தற்போதைக்கு பணிநியமனம் இல்லை என்று தெரிகிறது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் எப்பொழுது தேர்வர்கள் எதிர்பார்ப்பு
Reviewed by Rajarajan
on
27.1.20
Rating:
Reviewed by Rajarajan
on
27.1.20
Rating:


கருத்துகள் இல்லை