இலவச நீட் பயற்சி திட்டத்தை கைவிட அரசு திட்டமா ஏன் ..?
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழை எளிய மாணவர்களின் உயர்க்கல்வியை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்டதிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுதாக்கல் செய்தது. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாகவும் தனது வாதத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
நீட் தேர்வு குறித்து அரசின் நிலைப்பாடு மாறியிருப்பதால், நீட் இலவச பயற்சியை தொடர்ந்து வழங்க வேண்டுமா? அவ்வாறு வழங்கினால் அது கொள்கை முரண்பாடாக இருக்குமா? நீதிமன்ற வழக்கு விசாரணையில் தனக்கு எதிராக முடியுமா? என்ற கோணத்தில் பள்ளி கல்வித்துறை யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலவச நீட் பயற்சி திட்டத்தை கைவிட அரசு திட்டமா ஏன் ..?
Reviewed by Rajarajan
on
22.1.20
Rating:
கருத்துகள் இல்லை