Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

5 மற்றும் 8ம் பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு , பிளஸ் 2 போன்றே ' டம்மி ஷீட் ' தேர்வு

பத்தாம் வகுப்பு , பிளஸ் 2 பொதுத்தேர்வு போன்றே 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வையும் நட த்த அரசு திட்டமிட்டுள்ளது . குறிப்பாக , வேறு பள்ளிக்குச் சென்று மாணவர்கள் தேர்வு எழுதவேண்டாம் என்றாலும் , தேர்வு அறை கண்காணிப்பாளராக வேறு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் . அதுவும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்

ஒவ்வொரு தேர்வுக்கும் ஆசிரியர்கள் மாறுவார்கள் . மேலும் , மாணவர்களுக்கு தரப்படும் விடைத்தாளின் முதல் பக்கம் ' டம்மி ஷீட் ' எனப்படும் . அதில் மாணவரின் பெயர் , சீரியல் எண் உள்ளிட்ட விவரங்கள் எழுதவேண்டும் . தேர்வு எழுதி முடித்ததும் , முதல் பக்கமான டம்மி ஷீட்டை தேர்வு அறை கண்காணிப் பாளர் கிழித்து எடுத்துக் கொண்டு , விடைத்தாளை திருத்துவதற்காக அனுப்பி வைப்பார் .

ஏனெனில் , சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியரே குறிப்பிட்ட மாண வரின் விடைத்தாளை திருத்தினாலும் , அது யாருடையது என்பது அவருக்கு தெரியாது . இந்த நடைமுறை , 10 மற்றும் பிளஸ் ' 2 பொதுத்தேர்வுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது . இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் .
5 மற்றும் 8ம் பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு , பிளஸ் 2 போன்றே ' டம்மி ஷீட் ' தேர்வு  5 மற்றும் 8ம் பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு , பிளஸ் 2 போன்றே ' டம்மி ஷீட் ' தேர்வு Reviewed by Rajarajan on 31.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை