TNPSC குரூப்4 முறைகேடு...இரவாக திருத்தப்பட்ட விடைத் தாள்கள்.. முறைகேட்டில் சிக்கிய TNPSC அரசு ஊழியர்கள்
தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்பட்ட அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு குறித்த புகாரின் பேரில் தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், தற்போது இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடாக தேர்வு எழுதியவர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளர்க் ஓம் காந்தன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டார். மேலும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இருக்கும் இவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 2 கைபேசிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இவருக்கு சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இவர் தனக்கு தெரிந்த நபர்களுக்கு குரூப்-4 தேர்வில் முறைகேடாக வெற்றி பெறுவதற்கு உதவும் படி கேட்டுள்ளார். இதற்காக ரூ.15 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, ரூபாய் இரண்டு இலட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். பின்னரும் காந்தனை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் பகுதி மக்களுக்கான பணியை தேர்வு செய்து கொள்ளுமாறு ஜெயக்குமார் கூறவே, தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னிலையில் காரில் சென்று ராமேஸ்வரத்தில் அழியக்கூடிய மையை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், இவர்களின் திட்டப்படி தேர்வு முடிந்ததும் மறுநாள் இரவு 8 மணியில் விடைத்தாள்களை ஏபிடி பார்சல் சர்வீஸ் லாரியில் ஏற்றிய நிலையில், சாவியை வாங்கி ஜெயகாந்தன் வைத்துள்ளார். பின்னர் 9.50 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டடு, ஜெயக்குமார் தனது காரில் பின் தொடர்ந்து வரவே, சிவகங்கையை தாண்டியுள்ள பகுதியில் சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்த பாதுகாப்பு படை அதிகாரி மற்றும் ஓட்டுனரை சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு வந்துள்ளனர்.
இந்த நேரத்தில், ஜெயக்குமார் லாரியின் சாவியை வைத்து பூட்டி வைத்திருந்த விடைத்தாளில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் விடைத்தாள் நகல்களை எடுத்து புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வந்தவர்கள் சென்னையை நோக்கி புறப்பட்ட நிலையில், விழுப்புரத்தில் தேனீர் கடையில் டீ குடிப்பதற்காக அதிகாலை ஐந்தரை மணியில் நிறுத்தியுள்ளனர்.
பின்னர் அந்த இடத்தில் ஜெயக்குமார் திருத்தப்பட்ட விடைத்தாள்களை உள்ளே வைத்து பூட்டி சாவியை திருப்பிக் கொடுத்தது சென்றுள்ளார். பின்னர் சென்னைக்கு புறப்பட்ட வாகனம் மதியம் 1 மணியளவில் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்கள் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தற்போது இடைத்தரகராக செயல்பட்ட பாலசுந்தரராஜ் என்ற நபரையும் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
TNPSC குரூப்4 முறைகேடு...இரவாக திருத்தப்பட்ட விடைத் தாள்கள்.. முறைகேட்டில் சிக்கிய TNPSC அரசு ஊழியர்கள்
Reviewed by Rajarajan
on
26.1.20
Rating:
கருத்துகள் இல்லை