School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.01.20
School Morning Prayer Activities
திருக்குறள் : 368
அதிகாரம் : அவாஅறுத்தல்
"அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
பொருள் :
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.
பழமொழி
Good swimmers are sometimes drowned.
யானைக்கும் அடி சறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.
2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.
பொன்மொழி
அதீத வேலை செய்யும் போது ஏற்படாத களைப்பு அதீத கவலைப்படும் போது ஏற்படும்.எனவே கவலையை களையெடுங்கள்.
--------ஆபிரகாம் லிங்கன்
பொது அறிவு
1. இந்தியாவின் முதல் தனியார் ரேடியோ எஃப். எம்மின் அலைவரிசை நிலையத்தின் பெயர் என்ன?
ரேடியோ சிட்டி (1.7.2001ல் துவங்கப்பட்டது)
2.பிஸ்ஸா (pizza) என்ற சிற்றுண்டி எந்த நாட்டில் தோன்றியது?
இத்தாலி
English words & meanings
Endemiology – study of local diseases. உள்நாட்டு நோய்கள் குறித்த படிப்பு.
Edifying - providing moral or intellectual instruction. ஒருவரை மேம்படுத்தும் காரியம்
ஆரோக்ய வாழ்வு
சிறுதானியங்கள் ட்ரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலத்தை கொண்டுள்ளதால் இது பசியின்மையைக் குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது.
Some important abbreviations for students
cont. - containing, content, continue
crit. - criticism
நீதிக்கதை
குருவிற்கு நேர்ந்த சோதனை
குறள் :
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
விளக்கம் :
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
கதை :
ஒரு துறவி அவருக்கு ஐந்து சீடர்கள், ஒரு நாள் அவர் அணிந்து இருந்த காவி உடை கிழிந்து விட்டது, அதனை தைக்க வேண்டி ஐந்து சீடர்களிடமும் காசு கொடுத்து ஊசி வாங்கி வரசொன்னார்.
அந்த ஐந்து சீடர்களும் இதுவரை ஊசியை பார்த்தது இல்லை. கடைக்கு சென்றார்கள் ஊசி கேட்டார்கள், அவர்களும் கொடுத்தார்கள். ஆனால் அது ஊசி தான் என்பதை அவர்கள் நம்பவில்லை, நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று வேறு கடைக்கு சென்று விட்டார்கள். அங்கும் அதையே கொடுத்தார்கள்.
இறுதியில் நீங்கள் எல்லாம் எங்களை ஏமாத்த நினைகிறீர்கள் என்று கூற, அந்த கடைக்காரன் இவைகள் முட்டாள் என புரிந்து கொண்டு, சீடர்களே உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டார்கள், நடந்ததை கூற, சரி அதை எப்படி நீங்கள் ஊசி இல்லை என சொல்கிறீர்கள் என கடைக்காரன் வினவினான்.
ஐவரும் சொன்னார்கள் எங்கள் குரு ஐந்து பேரை அனுப்பி ஒரு ஊசி வாங்கி வர சொன்னார். கண்டிப்பாக அது மிகவும் பெரியதாக தான் இருக்கும் என கூற, அவரும் ஒரு பெரிய பனை மரத்தை காண்பித்து இது தான் ஊசி தூக்கி கொண்டு போங்கள் என் கூறிவிட்டு அதற்குரிய காசுகளை வாங்கிகொண்டார்.
நீதி :
ஒருவரின் வலிமையை அறியாமல் அவரை நம்பி ஒரு செயலை ஒப்படைத்தல் மிகவும் தவறு.
இன்றைய செய்திகள்
31.01.20
∆ கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 23-வது இடத்தில் உள்ளது.
∆ இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
∆ கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடியுள்ளது.
∆ சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு கடந்த நிதி ஆண்டில் (2018-2019) ரூ.715 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
∆ உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
∆ ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
Today's Headlines
🌸India ranks 23rd in the list of countries which are at risk of coronavirus transmission.
🌸Sri Lankan Prime Minister Mahinda Rajapakse to visit India next week.
🌸Russia has closed its border with China as an attempt to prevent the spreading of the corona virus.
🌸 Study report states that there is a loss of Rs 715 crores for Chennai metro railway station in the last financial year (2018-2019).
🌸Chennai city police commissioner A.K Viswanathan said that Chennai city police is taking steps to make Chennai ,the safest city in the world.
🌸Djokovic stepped on to the final after defeating Roger Federer at the Australian Open.
Prepared by
Covai women ICT_போதிமரம்
School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.01.20
Reviewed by Rajarajan
on
30.1.20
Rating:
கருத்துகள் இல்லை