தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 - அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு திறனறித் தேர்வு நடத்த உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்த “திறனறித் தேர்வு” நடத்த உள்ளதாக அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) அனைத்து வகை பள்ளிகளிலும் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் இத்தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது கொள்குறி வகையில் நடத்தப்படுகிறது.
இத்தேர்வு பாடத்திட்டம் 10ம் வகுப்பின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று வருகிற 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வானது வருகிற அக்டோபர் 1ம் தேதி அன்று காலை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறும் 1500 மாணவ, மாணவியர்கள் வரை தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 750 அரசு பள்ளி மாணவர்களும், 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை