தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வாணையம் தகுதி தேர்வினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இத்தகைய தேர்வு நடைபெற தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த பல ஆசிரியர்கள் தேர்வு எழுத முடியாமல் இருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், இது குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனை அடுத்து நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் குறைந்து கட்டுக்குள் வர தொடங்கி உள்ளதால் அனைத்து விதமான போட்டி தேர்வுகளும் நடைபெற அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் இது குறித்து வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
மேலும் இந்த வழக்கில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தை காட்டி உரிய பலன்களை அளிக்க பள்ளிக்கல்வித்துறை மறுத்துள்ளதாக அந்தோணிசாமி குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறித்து இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மனுதாரருக்கு கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து உரிய பலன்களை வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 8 வாரத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை