NEET தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்தியாவில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மத்திய அரசின் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட இந்த நுழைவு தேர்வுக்கு நாடு முழுவதும் பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. இருப்பினும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த நுழைவு தேர்வானது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் இந்த தேர்வுகள் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது மருத்துவ கனவுகள் நிறைவேறாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
நடப்பு ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கு என்று கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 17.78 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 18 நகரங்களில் 200க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விடைக்குறிப்பு, ஓ எம் ஆர் விடைத்தாள் நகல்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை காண்பதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. முதலில் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
2. பிறகு Result – NEET (UG) 2022 என்ற இணைப்பை click செய்ய வேண்டும்.
3. பின்னர் NEET 2021 நுழைவு தேர்வுக்கான தேர்வர்களது தனி விவரங்களை enter செய்து லாக் இன் செய்ய வேண்டும்.
4. இதன் பிறகு NEET 2022 முடிவுகள் காட்டப்படும்.
கருத்துகள் இல்லை