Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆன்லைன், தொலைதூர கல்வி, நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை: யுஜிசி விளக்கம்

 வழக்கமான படிப்புக்கு இணையானது ஆன்லைன் படிப்பு என யுஜிசி விளக்கம் அளித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஆன்லைன் படிப்புகள் மற்றும் தொலைதூர படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, பல் நுழைவு வெளியேறுதல் (Multiple Entry and Exit), விருப்பதெரிவு அடிப்படையிலான தரமதிப்பீடு அமைப்பு முறை (Choice based Credit System) போன்ற முன்னெடுப்புகளும் இதில் அடங்கும். ஆன்லைன் வழியில் படிக்கக்கூடிய படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் பல்கலைக்கழக மானிய குழு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில்; ஆஆன்லைன், தொலைதூர கல்வி, நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை. அனைத்து டிகிரி பட்டங்களும் ஒரே மதிப்புடையது தான் என தெரிவித்துள்ளது.



ஆன்லைன், தொலைதூர கல்வி, நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை: யுஜிசி விளக்கம் ஆன்லைன், தொலைதூர கல்வி, நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை: யுஜிசி விளக்கம் Reviewed by Rajarajan on 10.9.22 Rating: 5

கருத்துகள் இல்லை