Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஜாக்டோ ஜியோ வாழ்வாதர நம்பிக்கை மாநாடு தோல்வி..!அரசு ஊழியர் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் எனும் வாழ்வாதரம் கேள்விக்குறி.!!

 ஜாக்டோ ஜியோ வாழ்வாதர நம்பிக்கை மாநாடு தோல்வி..!அரசு ஊழியர் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் எனும் வாழ்வாதரம்  கேள்விக்குறி.!!


ஜாக்டோ ஜியோ என்பது ஒரு போராட்டக்குழு என்பதை மாற்றி ஆட்சியாளர்களின் துதிபாடும் குழுவாக மாற்றிய பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்த தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களின் சார்பில் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


அரசாணைகள் 101&108 என்பது நமது வாழ்வாதர கோரிக்கைகள் என்று முன்னிறுத்திய மாநில ஒருங்கிணைப்பாளர.களை என்னவென்று சொல்வது.


உண்மையில் இது ஒட்டு மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களின் மாநாடு அல்ல,தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களின் மாநாடு,101 அரசாணை இரத்து என்பதை தவிர வேறுஒன்றும் இல்லை


கொரோனா கால கட்டத்தில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைக்கப்படவில்லை என்பதை திமுக ஆட்சியின் சாதனையாக மாண்புமிகு முதல்வர் மாநாட்டில் பேசியிருப்பது வேடிக்கையானது.கொரோனா காலத்தில் ஆட்சியில் இருந்த்து அவர் சொல்வது போல் கடந்த ஆட்சி,திமுக ஆட்சி அல்ல.


உரிய அகவிலைப்படி உயர்வை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வழங்குவதும்,அகவிலைப்படி நிலுவைத்தொகையினை ஸ்வாக செய்வதுமே திமுக அரசின் சாதனை.


இதெல்லாம் தெரிந்தும் மாநாடு மாநாடு என்று சொல்லி ஊர் ஊராக சுற்றி தனது அரசியல் சுய இலாபத்திற்காகவும் ,தனது சொந்த வாழ்வாதாரத்திற்காகவும் ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் பிழைப்பு நடத்தும் ஒருவரை நம்பி ஒட்டுமொத்த ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களும் உறுப்பினர்களும் மோசம் போனதும்,


ஒட்டுமொத்த.தமிழக அரசு ஊழியர்களின் வாழ்வாதர கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை இந்த மாநாடு கேள்விக்குரியதும் கேலிக்குரியதும் ஆக்கி விட்டது.


ஜாக்டோ ஜியோ என்றாலே அது போராட்டக்குழு என்பதனை நிரூபிக்க வேண்டுமானால் பழைய ஓய்வூதிய திட்டம் என்ற ஒற்றை வாழ்வாதர கோரிக.கையை முன் வைத்து அஇஅதிமுக ஆட்சியில் போராட்ட களம் கண்டதை விட இருமடங்கு தற்போதைய திமுக ஆட்சியிலும் போராடினால் மட்டும் நமது பழைய ஓய்வூதிய திட்டம். எனும் வாழ்வாதர கோரிக்கையை மீட்டெடுக்க முடியும் என்பதனையும்,இன்று நடைபெற்ற மாநாட்டிலிருந்து நாம் கற்ற பாடத்தை வைத்து ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்ட சிந்திப்போம்! செயல்படுவோம்!!


 இவண

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை.

ஜாக்டோ ஜியோ வாழ்வாதர நம்பிக்கை மாநாடு தோல்வி..!அரசு ஊழியர் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் எனும் வாழ்வாதரம் கேள்விக்குறி.!! ஜாக்டோ ஜியோ வாழ்வாதர நம்பிக்கை மாநாடு தோல்வி..!அரசு ஊழியர் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் எனும் வாழ்வாதரம்  கேள்விக்குறி.!! Reviewed by Rajarajan on 10.9.22 Rating: 5

கருத்துகள் இல்லை