பென்ஷன் திட்டத்தில் புதிய மாற்றம் – முழு விவரங்கள்
இந்தியாவில் 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட இத்திட்டம் 2009ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணையலாம்.
இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நுழைய அதிகபட்ச வயது தற்போது 70 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 65 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது புதிய மாற்றமாக தேசிய ஓய்வூதிய ஆணையம் நேரடி பங்களிப்பு மற்றும் புதிய பென்ஷன் கணக்குகளுக்காக POP க்கு கமிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் சந்தாதாரர்கள் தங்களின் PRAN எண்ணுடன் ஒரு ஸ்ட்டாடிக் விர்ச்சுவல் ஐடியை இணைந்திருக்க வேண்டும். இவை இணைக்கப்பட்டிருந்தால் தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து பென்ஷன் கணக்குக்கு வாலண்டியராக பங்களிக்கலாம்.
இந்த POP களை ஊக்குவிக்க, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய பென்ஷன் சேவை வழியாக கமிஷன் வழங்க அனுமதி அளித்துள்ளது. eNPS உடன் ஒப்பிடும் வகையில், தொடர்புள்ள சந்தாதாரர்கள் மேற்கொண்ட டி-ரெமிட்டன்ஸ் பங்களிப்புகளில், அந்தந்த POP களுக்கான கமிஷன், 0.20 சதவிகித நன்கொடையாக இருக்க வேண்டும். கணிசமான பங்களிப்புக்கும், உழைப்புக்கும் வெகுமதி கொடுக்கும் வகையில் செப்டம்பர் 1, 2022 முதல் பயனாளர்களுக்கு கமிஷன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை