Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு ஆதார் எண் இணைக்கும் முறைகள்

 


இந்தியாவில் முக்கிய ஆவணமான விளங்கும் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகி இருப்பது, தேர்தலில் பலமுறை வாக்களிப்பது போன்ற குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஜூலை மாதம் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடங்கியது. தற்போது ஆன்லைன் வாயிலாக ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

வாக்காளர் அட்டை – ஆதார் எண் இணைக்கும் முறைகள்:
  • முதலில் ‘Voter Helpline’ என்ற செயலியை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • அதனை ஓபன் செய்தவுடன் முன் பக்கத்தில் ‘I Agree’ என்ற ஆப்ஷன் வரும் அதனை கிளிக் செய்து ‘Next’ கொடுக்கவும்.
  • அடுத்ததாக ‘Voter Registration’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் Electoral Authentication Form 6B படிவத்தை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.
  • அந்த படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பவும்.
  • இந்த OTP வந்தவுடன் அதனை பதிவிட்டு ‘Verify’ கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவிட்டு மாநிலத்தை தேர்வு செய்து, ‘Fetch details’ என்பதை கொடுத்து ‘Proceed’ செய்யவும்.
  • மேற்கண்ட செயல்முறைகள் முடிந்தவுடன் உங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைக்கபட்டு விடும்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு ஆதார் எண் இணைக்கும் முறைகள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு ஆதார் எண் இணைக்கும் முறைகள் Reviewed by Rajarajan on 19.9.22 Rating: 5

கருத்துகள் இல்லை