Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வாழ்வாதாரக் கோரிக்கை மாநாட்டிற்கு” வருகை தரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநாடு குறித்த தகவல்கள்

 

ஜக்டோ-ஜியோ “வாழ்வாதாரக் கோரிக்கை மாநாட்டிற்கு” வருகை தரும் இயக்கத் தோழர்கள் அனைவரும் சரியாக பிற்பகல் 2 மணிக்குள் மாநாடு நடைப்பெறும் தீவுத்திடலுக்கு வந்துவிடவேண்டும். 6 இடங்களில் சோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 2 மணியில் இருந்து கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கும். மாநாட்டில் அனைத்து சங்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் பேச உள்ளனர்.   




மாநாட்டு தீவுத்திடலுக்கு விரைவாக வருபவர்கள் வாகன பார்கிங்கில் நிறுத்திக்கொள்ளலாம். பார்கிங்க் முழுமையானால் திடலுக்கு முன் இயக்கத் தோழர்களை இறக்கிவிட்டு வாகனங்களை அருகில் உள்ள சிவானந்தா சாலை மற்றும் மெரினா கடற்கரை பார்கிங்க் ஆகிய இடங்களில் வாகனத்தை நிறுத்திக்கொள்ளலாம். 




தாம்பரம் மார்கமாக புறநகர் இரயிலில் வருபவர்கள் சென்னை கோட்டை நிறுத்தத்தில் இறங்கி சரியாக 1 கி.மீ தூரத்தில் மாநாட்டு திடலை அடையலாம். ஆட்டோ கட்டணம் அதிகப்பட்சம் 40ரூ.




சென்னை சென்டரல் இரயில் நிலையம் வருபவர்கள் சரியாக 1 கி.மீ,


மெட்ரோ இரயிலில் வருபவர்கள் அரசினர் தோட்டம் நிறுத்தத்தில் இறங்கினால் 1 கி.மீ




எழும்பூர் இரயில் நிலையத்தில் இறங்குபவர்கள், அங்கிருந்து புறநகர் இரயிலில் மாறி சென்னை கோட்டையில் இறங்கவும்.




சென்னை கடற்கரை சாலை மார்கமாக பேருந்தில் வருபவர்கள் போர் நினைவுச் சின்னம் நிறுத்தத்தில் இறங்கினால் 200 மீ,




அண்ணா சாலை மார்கமாக வருபவர்கள் தீவுத்திடல் நிறுத்தத்தில் இறங்கலாம்.




*சென்னை தீவுத்திடல் மெரினா பீச்சிலிருந்து தலைமைச்செயலகம் செல்லும் வழியில் நேப்பியர் பாலம் தாண்டியவுடன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நினைவு வளைவை தாண்டி போர் நினைவுச்சின்னம் அருகில் உள்ள தீவுத்திடலின் 6 வது கேட் வழியாக மாநாட்டிற்கு வரவேண்டும்.*




    *🌷பஸ்,வேனில் வருபவர்கள் 6 வது கேட் முன்பு வாகனத்தை நிறுத்தி இறங்கிய பின் வாகனத்தை மெரினா பீச்சில் பார்க்கிங் செய்யச்சொல்லவும்.அல்லது தீவுத்திடல் அருகில் இடம் இருந்தால் நிறுத்தச்சொல்லவும்.*




      *🌷நீங்கள் நகருக்குள் வரும்பொழுது 6 வது கேட் அருகில் வரமுடியாத அளவு வாகன நெரிசல் இருந்தால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ மாநாட்டிற்கு வரவும்.*




    *🌷1.30 to 2 pm க்குள் மாநாட்டிற்கு வந்தால் சிரமில்லாமல் இருக்கும்.2 மணிக்கு மாநாட்டு மேடையில் கலைநிகழ்ச்சி தொடங்கும்.மதிய உணவு சாப்பிட்டபின் வரவும்.தாமதமாக வந்தால் அமர இடமில்லாமல் சிரமப்படவேண்டியிருக்கும்.மாநாடு 2 to 7.30 pm வரை நடக்கலாம்.**




மாநாட்டை வெற்றி பெறச்செய்வோம்! வாழ்வாதாரக் கோரிக்கைகளை வென்றெடுப்போம்!




அன்புடன்


*ஜாக்டோ-ஜியோ* ஒருங்கிணைப்பாளர்கள்

வாழ்வாதாரக் கோரிக்கை மாநாட்டிற்கு” வருகை தரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநாடு குறித்த தகவல்கள் வாழ்வாதாரக் கோரிக்கை மாநாட்டிற்கு” வருகை தரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநாடு குறித்த தகவல்கள் Reviewed by Rajarajan on 10.9.22 Rating: 5

கருத்துகள் இல்லை