Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு

 தமிழகத்தில் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை பற்றிய புள்ளிவிரம் EMIS தளத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது 36 வகையான தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பல்வேறு வகையான திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்களில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க ‘எமிஸ்’ தளத்தில் அனைத்து வகையான புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு EMIS எண் வழங்கப்படும். இந்த எண்ணில் அனைத்து தரவுகளும் சேமிக்கப்படும். மேலும் EMIS எண் ஒரு மாணவன் எத்தனை பள்ளிகளுக்கு மாறினாலும் அதே எண் தான் அடையாள எண்ணாக கருதப்படும்.



மேலும் இந்த எண்ணை பயன்படுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து தற்போது ‘எமிஸ்’ தளத்தில் மேலும் கூடுதலான தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தகவல் பதிவுப் பணி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 36 வகையான நோய்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டு ‘எமிஸ்’ தளத்தில் அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



அதன்படி ஒவ்வொரு மாணவர்களுக்கும் தைராய்டு, கண் பார்வை குறைபாடு, இரத்த சோகை, தொழுநோய், தோல் நோய், காச நோய், பல் நோய், வைட்டமின் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சிறுநீர் பாதையில் உள்ள பாதிப்பு, மாணவனின் தலை பெரிதா? சிறியதா? , இரண்டு கண்களும் ஒரே அளவில் இருக்கிறதா உள்ளிட்ட 36 வகையான தகவல்களை சேகரித்து எமிஸ் தளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மாணவர்கள் ஒரு வாரம் சாப்பிட்ட உணவு வகைகள் குறித்தும் பதிவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் இது போன்ற கூடுதல் பணிகளை வழங்குவது ஆசிரியர்களுக்கு மிகுந்த பணிச்சுமையாக உள்ளதாக ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு Reviewed by Rajarajan on 7.9.22 Rating: 5

கருத்துகள் இல்லை