Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

PG-TRB பணிநியமனத்தை தாமதமாக நடத்த தேர்வர்கள் கோரிக்கை!

 சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய, அரசு பல்தொழிநுட்ப (polytechnic) கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, பணியில் அமர உள்ள தேர்வர்களின் பெயர்கள், நேற்று கடந்த வாரம் வெளியாகிய Provisonal Selection List, 3237 காலியிடங்களுக்கான PGTRB அரசுப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக கணிதம், வேதியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய நான்கு பாடங்களுக்கு இரண்டு தேர்வு முறைகளிலும் காலி இடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.


மேற்படி இரண்டு தேர்வு முறைகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டு பணி வாய்ப்புகளிலும் சேர்ந்து பணியாற்ற சாத்தியமே இல்லை என்பதாலும், அவ்வாறு அவர்கள் இரண்டு தேர்வு முறைகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால், ஒரு பணிவாய்ப்புக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்க வாய்ப்புள்ளதால், இதன் பெயரில் தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

 PG-TRB பணிநியமனத்தை, TRB Polytechnic பணிவாய்ப்புகள் நிரம்பும் வரை நடத்தாமல் சற்று தாமதிக்க வேண்டும் என பணி நாடுநர் சார்பில் கேட்டு கொள்கிறேன். மேல்நிலை பள்ளிகளிலும், அரசு பல்தொழிநுட்ப கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பணி நிரப்படுவது மிகவும் முக்கியம் என்பதாலும், PGTRB பணிநியமனத்தை சற்று தாமத படுத்தினால் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாகும் என்பதாலும், சான்றிதழ் சரிபார்ப்பை தாமதப்படுத்தி நடத்திட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். நன்றி!

உதாரணமாக கணிதவியல் துறையில் 20 க்கும் மேற்பட்டோர் Polytechnic TRB-யிலும் PG TRB-யிலும் தேர்வாகி உள்ளார்கள்...



PG-TRB பணிநியமனத்தை தாமதமாக நடத்த தேர்வர்கள் கோரிக்கை! PG-TRB பணிநியமனத்தை தாமதமாக நடத்த தேர்வர்கள் கோரிக்கை! Reviewed by Rajarajan on 27.9.22 Rating: 5

கருத்துகள் இல்லை