ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 TET Paper 2 கடினமாக இருந்ததாக தேர்வர்கள் வருத்தம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் Tet paper 2 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது. இத்தேர்வுகள் 32 மாவட்டங்களில் 1081 மையங்களில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டில் அறிவிக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து கேள்விகள் எடுக்கப்படாமல் வெளியிலிருந்து கேள்வி வந்ததாக தேர்வர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சில ஆசிரியர்கள் நீட் தேர்வு போன்று இத்தேர்வை ரத்து செய்ய கல்வியாளர்கள் வலியுறுத்த வேண்டும் என கூறினர்.
ஆசிரியருக்கு மட்டும் ஏன் இத்தனை தேர்வு தகுதித் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பிற்கான போட்டித்தேர்வு b.ed படிக்கையில் கல்லூரியில் தேர்வு என எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இளங்கலையில் படித்த பாடப்பகுதியில் இருந்து மட்டுமில்லாமல் மற்ற பிரிவுகளும் சேர்த்து கேட்கப்படுவதால் மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 TET Paper 2 கடினமாக இருந்ததாக தேர்வர்கள் வருத்தம்
Reviewed by Rajarajan
on
10.6.19
Rating:
கருத்துகள் இல்லை